மிக மெல்லிய புடவையில் தீபாவளியை கொண்டாடிய வாணி போஜன்.! இதுதான் கலர்ஃபுல்லான தீபாவளியோ

vaani-bhojan

தென்னிந்திய சினிமாவில் நடிகையாவும், மாடல் அழகியாகவும் வலம் வந்தவர் நடிகை வாணி போஜன். இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர். 2010ஆம் ஆண்டு ஓர் இரவு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதன்பிறகு தமிழ் தொலைகாட்சி தொடர்களில் தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு ஆகிய தொடர்களில்  நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார்.

அதுவும் தெய்வமகள் சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். அதன் பிறகு தெலுங்கில் இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவருக்குமிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது தமிழில் நடித்த ஓ மை கடவுளே திரைப்படம் தான் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

மேலும் இவர் நடிப்பில் மலேசியா டு அம்னீசியா, ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளியானது. தற்பொழுது அதிக திரைப்படங்களை பெற்றுள்ள நடிகைகளில் இவரும் ஒருவர். இவர் கைவசம் தற்போது பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, பாயும் ஒளி நீ எனக்கு, மகான், தாய் திருவா, பரத் அவர்களுடன் ஒரு திரைப்படம் விதார்த் அவர்களுடன் ஒரு திரைப்படம் என வரிசை கட்டி நிற்கிறது.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் வாணிபோஜன் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் இந்த நிலையில் தீபாவளித் திருநாளை முன்னிட்டு பல நடிகைகளும் புதிய புகைப்படங்களை வெளியிட்டு தீபாவளி வாழ்த்து கூறி வருகிறார்கள்.

vaani bhojan
vaani bhojan

அந்த வகையில் நடிகை வாணி போஜன் பச்சை நிற மெல்லிய புடவையில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து கொண்டு போஸ் கொடுத்து தீபாவளி திருநாள் வாழ்த்து கூறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இதுதான் உங்கள் தீபாவளி உடையா என கமெண்ட் செய்து அவரை வர்ணித்து வருகிறார்கள்.

vaani bhojan