பல இளம் நடிகைகள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் செய்யும் ஒரே விஷயம் தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் கியூட் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடையது தான்.
அந்த வகையில் சின்னத்திரை நடிகையாக அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை வாணி போஜன். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் மூலம் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இதனைத்தொடர்ந்து லட்சுமி வந்தாச்சு சீரியலில் நடித்திருந்தார்.இதனைத்தொடர்ந்து கிங்ஸ் ஆப் ஜூனியர்ஸ் என்ற காமெடி நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்தார்.
இந்நிலையில் தற்போது படிப்படியாக உயர்ந்து வெள்ளித்திரையில் பல படங்களில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
அந்த வகையில் ட்ரிபிள் திரைப்படத்தில் முன்னணி நடிகரான ஜெய்யுடன் இணைந்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் நடிகை வாணி போஜன்.
இந்நிலையில் வாணிபோஜன் நடித்திருந்த தெய்வமகள் சீரியல் மீண்டும் கலைஞர் டிவியில் மார்ச் 1ஆம் தேதியிலிருந்து ஒளிபரப்பாக உள்ளது.
எனவே மீண்டும் தெய்வமகள் சீரியலில் வாணி போஜனை பார்க்க போறோம் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.