சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ள குழந்தை நட்சத்திரங்கள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் தொடர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோஷியல் மீடியாவில் வெளியீட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள் ரசிகர்கள் மத்தியில் தற்பொழுதும் தங்களுக்கென ஒரு இமேஜ் இருக்க வேண்டுமென்பதை விரும்புகிறார்கள்.
அந்த வகையில் ஏராளமான நடிகைகள் சின்னத்திரைக்கு அறிமுகமாகி பிறகு வெள்ளித்திரையில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.அந்த வகையில் ஒருவர்தான் நடிகை வாணி போஜன் இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
பிறகு லக்ஷ்மி வந்தாச்சு நடித்திருந்தார் இதனைத்தொடர்ந்து சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு கிங்ஸ் ஆப் காமெடி சீசன் 2 நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வந்தார்.இதன்மூலம் தான் இவருக்கு 2020ஆம் ஆண்டு வெள்ளித்திரையில் ஓ மை கடவுளே முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
இதில் மீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். பிறகு லாக்கப்,மலேசியா டூ ஆம்னிஷியா ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார். என்னதான் இவர் திரைப்படங்களில் நடித்தாலும் தொடர்ந்து இவருக்கு ஹீரோயினாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை இதன் காரணமாகவே இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள். மத்தியில் பிரபலமடைந்தார்.
தற்பொழுது இவர் கேசினோ, பகைவனுக்கு அருள்வாய், பாயும் ஒளி நீ எனக்கு என தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் வெப் சீரியல் ஒன்றிலும் நடித்து இருந்தார்.இந்நிலையில் தற்போது இவர் தனது பார்வையினால் சுண்டி இழுக்கும் அளவிற்கு அழகாக இருக்கும் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறார்கள்.