பொதுவாக சமீபகாலங்களாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைகள் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வரும் பல நடிகர், நடிகைகள் இருந்து வருகிறார்கள். மேலும் இவ்வாறு சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைகள் தொடர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களை தந்து வருபவர்கள் பலர் உள்ளார்கள்.
அந்த வகையில் சிவகார்த்திகேயனை தொடர்ந்து பிரியா பவானி சங்கர், வாணி போஜன், புகழ் என சொல்லிக் கொண்டே போகலாம். இப்படிப்பட்ட நிலையில் டிவி சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து இதன் மூலம் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றவர் தான் வாணி போஜ்ன்.
இவர் ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் தன்னுடைய சிறந்த நடிப்பு திறமையினால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்திருந்தாலும் எனக்கு தொடர்ந்து திரைப்படங்களை நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை இதன் காரணமாக சோசியல் மீடியாவில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை ஆரம்பித்தார்.
இதன் காரணமாக இவருக்கு தொடர்ந்து திரைப்படங்கள் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது அதோடு மட்டுமல்லாமல் கவர்ச்சி வேடங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார். சமீபத்தில் வாணி போஜன் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர் ‘கவர்ச்சிக்காக நடிப்பதில் தவறு இல்லை ஆனால் அது எல்லை மீறக் கூடாது நான் சாதாரண புடவை கட்டினாலும் கவர்ச்சி என்கிறார்கள் காலத்தை ஏற்றார் போல் சிந்தனைகளையும் மாற்ற வேண்டும் என்கின்றார். இவ்வாறு பொதுவாக பல நடிகைகள் சினிமாவில் பிரபலமடைந்து விட்டால் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சியில் ஆர்வம் காட்டுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்
அந்த வகையில் தான் வாணி போஜன் சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் கவர்ச்சி என்பது அவசியம் என்பதை தெரிந்து கொண்டு கவர்ச்சிக்கு பச்சை கொடி காட்டி கிளாமர் நடிகையாக மாறி உள்ளார் என கூறப்படுகிறது.