சின்னத்திரை நயன்தாரா என்றால் சும்மாவா.! கொண்டையில் மல்லிகை பூவை வைத்துகொண்டு விஸ்வாசம் நயன்தாரா போல் போஸ் கொடுத்த வாணி போஜன்.!

vaani-bhojan

சினிமாவில் உள்ள குழந்தை நட்சத்திரங்கள் முதல் சின்னத்திரை நடிகைகள் வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் தான் நடிகை வாணி போஜன்.

இவர் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் சீரியலின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இதனைத்தொடர்ந்து மாயா, ஆஹா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

இதன் மூலம் இவருக்கு வெள்ளித் திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, அசோக் செல்வன், ரித்திகா சிங் உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடித்திருந்த ஓ மை கடவுளை திரைப்படத்தில் இவருக்கும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதன் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமான இவர் நடிகர் வைபவ்வுடன் இணைந்து லாக்கப் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது இவர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஒரு படத்திலும், ஆதவ் கண்ணதாசனுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்க உள்ளார்.

இவரின் சிறந்த நடிப்பு மற்றும் அழகினை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இவரை சின்ன நயன்தாரா என்று கூறி வருகிறார்கள். இந்நிலையில் வாணி போஜன் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

அந்த வகையில் அனைவருக்கும் போதை ஏற்றும் வகையில் பட்டுப்புடவையில் தலை நிறைய மல்லிகை பூவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேத்தி உள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.