தவறு செய்யும் கணவனை ஏற்றுக் கொள்ளலாமா ரசிகரின் கேள்விக்கு வாணிபூஜன் தரமான பதிலடி.!

vaani-bhojan

சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகைகளான நயன்தாரா, திரிஷா ஆகியோர்களை ஓவர்டேக் செய்துள்ளவர் வாணி போஜன். இவர் கிட்டத்தட்ட ஆறு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். அந்த வகையில் இவர் சன் டிவியில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்த சீரியலின் மூலம் குழந்தை நட்சத்திரங்கள் முதல் முதியவர்கள் வரைவுள்ள அனைவரையும் வெகுவாக கவர்ந்தார். அதன் பிறகு சமீபத்தில் OTT வழியாக வெளிவந்த ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

அந்த வகையில் இவரை ரசிகர்கள் குட்டி நயன்தாரா என்று கூறி வருகிறார்கள். இந்நிலையில் தொடர்ந்து வாணி போஜன் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது ரசிகர்களிடம் லைவ் சேட்டில் பேசியும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் வாணி போஜன் சின்னத்திரையில் நடித்து வந்த இவர் தற்போது ஏன் தொடர்ந்து வெள்ளித்திரையில் நடித்து வருகிறீர்கள் என்று ரசிகர்கள் கேட்டுள்ளார்கள்.  அதற்கு பதிலளித்த வாணிபூஜன் எனக்கு இந்த கதாபாத்திரத்தில் மட்டும் தான் நடிக்க வேண்டும் என்பது இல்லை அனைத்து கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை என்று கூறியிருந்தார்.

அதோடு சினிமாவில் ஜெயிக்க வேண்டுமென்றால் கவர்ச்சியோ இல்லை அழகோ முக்கியமில்லை திறமைதான் முக்கியம் என்று கூறியுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் வாணி போஜன் நடிப்பில் மலேசியா டூ அம்னீசியா என்ற  திரைப்படம் வெளிவர உள்ளது இத்திரைப்படத்தில் வாணிபோஜனுக்கு  ஜோடியாக வைபவ் நடித்துள்ளார்.

இத்திரைப்படம் திருமண மானத்திற்கு பிறகு ஒரு கணவன் தனது மனைவிக்கு தெரியாமல் ரகசிய உறவில் இருந்து வருகிறார்.ஆனால் இதனைத் தெரிந்தும் வாணி போஜன் ஏற்றுக்கொள்கிறா.ர் இதுகுறித்து ரசிகர் இவ்வாறு பெருந்தன்மையாக இருப்பது நல்ல விஷயம் தானா என்று கேட்டுள்ளார்.

vaani pojan
vaani pojan

அதற்கு பதிலளித்த வாணிபோஜன் தற்போது உள்ள பெரும்பாலான பெண்கள் இவ்வாறு பல கணவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்கிறார்கள் இன்னும் ஒரு சிலர் ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் வெறுத்து விடுகிறார்கள். இதில் ஏற்றுக்கொள்ளும் கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.