விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி அதன்பிறகு தனது விடாமுயற்சியினால் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை வாணி போஜன். இவர் பிரபல சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானார்.சீரியலில் இவரின் சிறந்த நடிப்பினால் குழந்தை நட்சத்திரங்கள் முதல் முதியவர்கள் வரை ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
இவர் மாயா, ஆஹா,தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமடைந்த இவருக்கு வெள்ளித்திரையிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் பல திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு தற்போது தொடர்ந்து ஹீரோயினாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் அசோக்செல்வன், ரித்திகா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்,நடிகைகள் ஆகியோர்களுடன் இணைந்து ஓ மை கடவுளே திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தின் தொடர்ந்து நடிகர் வைபவ்வுடன் இணைந்து லாக்கப் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அதன்பிறகு நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்திலும், ஆதவ் கண்ணதாசன் திரைப்படம் ஒன்றிலும், சூர்யா தயாரிக்க உள்ள பிக்பாஸ் ரம்யா பாண்டியன் ஆகியோர்கள் நடிக்க உள்ள திரைப்படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இவ்வாறு அடுத்தடுத்து ஏராளமான திரைப்படங்களில் கமிட்டாகி வரும் இவர் தனது சோசியல் மீடியாவில் அசத்தலான புகைப் படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் நடுரோட்டில் சல்வாரியில் தேவதை போல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது அதிகப்படியான லைக்குகளை பெற்று வருகிறது. இதோ அந்த புகைப்படம்.