தனது சிறந்த நடிப்பினால் சின்னத்திரையில் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்த தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கலக்கி வருபவர் நடிகை வாணி போஜன். இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் சின்னத்திரையில் ஆஹா,மாய, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு உள்ளிட்ட சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
இவரின் சிறந்த நடிப்புத் திறமையினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தால் ஒரு கட்டத்திற்குப் பிறகு ஹீரோயினாக நடிப்பதற்கான வாய்ப்பு களையும் பெற்றார். அந்த வகையில் ஓ மை கடவுளே,லாக்கப், மலேசியா டூ அம்னீசியா உள்ளிட்ட சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து டிரிபிள்ஸ் என்ற வெப் சீரியல் ஒன்றிலும் நடித்தார்.
பிறகு சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன் நடிப்பில் வெளிவந்த ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படத்தில் பத்திரிகையாளராக நடித்திருந்தார். இப்படி தொடர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் கதாநாயகியாக நடிப்பதற்காக சரியான கதாபாத்திரம் கிடைப்பதற்காக காத்திருக்கிறார்.
இது ஒரு பக்கமிருக்க சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற வேண்டும் என்பதற்காகவும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சி என்ற உத்தியை பயன்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் வாணி போஜன் தொடர்ந்து சோசியல் மீடியாவில் அழகான மற்றும் சில சமயம் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் புடவைகள் மிகவும் தேவதை போல அழகாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்காக ரசிகர்களை லைக்குகளையும் கமெண்டுகளையும் அள்ளிக் குவித்து வருகிறார்கள்.