பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஒருவர் ஆடம்பர பங்களாவை 190 கோடிக்கு வாங்கி இருக்கும் நிலையில் இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது பாலிவுட் சினிமாவுக்கு பேஷன் ஐகான் என்ற பெயருடன் முன்னணி இடம் பிடித்திருக்கும் நடிகை தான் நடிகை ஊர்வசி ரவுடேலா.
பாலிவுட் சினிமாவில் கிங்ஸ் ஆப் தி கிரேட் என்னும் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமான நிலையில் இதனை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். தற்பொழுது முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் தமிழ் சினிமாவில் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் நடித்திருந்த லெஜன்ட் படத்தில் நடித்திருந்தார்.
இதன் மூலம் பான் இந்திய படமாக உருவான இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ஊர்வசி ரவுடேலா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளார். படும் கவர்ச்சியான போட்டோ ஷூட்டுகளை நடத்தி வருவதோடு மட்டுமல்லாமல் படங்களிலும் அப்படி தான் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற 76ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில் இவர் அணிந்திருந்த முதலை நக்லஸ் மற்றும் பார்பி பிங்க் ஆடை போன்றவை ரசிகர்களுக்கு இடையே மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது.
இவ்வாறு அனைத்து நடிகைகளை விடவும் மிகவும் வித்தியாசமாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் ஊர்வசி பாலிவுட் சினிமாவை தொடர்ந்து கன்னடம், பெங்காலி போன்ற மொழி திரைப்படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்புகளைப் பெற்று முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர்தான் தற்பொழுது 190 கோடி மதிப்புள்ள பிரம்மாண்ட பங்களா ஒன்றை வாங்கியுள்ளார் அதாவது மும்பை ஜூஹு பகுதியில் நான்கு மாடி கொண்ட புதிய பங்களா ஒன்றை விலைக்கு வாங்கி இருக்கிறார்.
190 கோடி மதிப்பு கொண்ட இந்த வீட்டில் ஆடம்பரமான தோட்டம் தனிப்பட்ட உடற்பயிற்சி கூடம் அலங்கார வேலைபாடுகள் என்று பல வகை வசதிகளுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் மறைந்த பிரபல தயாரிப்பாளர் யாஷ் சோப்ராவின் பக்கத்து வீட்டை தான் நடிகை ஊர்வசி ரவுடேலா வாங்கியுள்ளார். தற்பொழுது இவர் பாலிவுட்டில் தில் ஹை கிரே, தெலுங்கில் பிளாக் ரோஸ் போன்ற திரைப்படங்களில் நடித்த வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.