தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகைகள் ஆரம்பத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தலை காட்டிருப்பார்கள் அல்லது வேறு ஏதாவது மீடியா உலகில் இருந்து இருப்பார்கள் அந்த வகையில் நடிகை திரிஷா முதலில் மாடல் அழகியாக இருந்து பின் விளம்பர படங்களில் நடித்தது மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தார்.
ஒரு கட்டத்தில் சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தார். மக்கள் போக போக ஒரு சமயத்தில் ஹீரோயின்னாக விஸ்வரூபம் எடுத்தார். பின் இவர் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததால் வெற்றிகளை குவித்தார் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திர நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, விக்ரம், விஜய் சேதுபதி போன்ற நடிகர்களுடன்..
நடித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தார் மேலும் இவருக்கு என ரசிகர்களும் உருவாகின. தொடர்ந்து திரை உலகில் 20 வருடங்களுக்கு மேலாக நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் இப்பொழுதும் கூட இவருக்கு பட வாய்ப்புகள் ஏராளமாக குவிவதால் இவரது மார்க்கெட் குறைந்தபாடு இல்லாமல் இருக்கிறது.
தற்பொழுது ஒரு படத்திற்கு நான்கு கோடி சம்பளம் வாங்கி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மைக்காலமாக திரை உலகில் இருக்கும் நடிகர், நடிகைகள் குவித்து வைத்திருக்கும்.. சொத்து மதிப்பு குறித்து பார்த்து வருகிறோம் அந்த வகையில் நடிகை திரிஷா குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்து ஒரு தகவல் கிடைத்திருக்கிறது.
அதன்படி பார்கையில் அவரது சொத்து மதிப்பு மட்டுமே சுமார் 90 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும் சினிமா வட்டாரங்கள் மத்தியில் பெரிதும் பேசப்படுகிறது.