மாநாடு திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்பு நடித்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு இந்த படத்தை கௌதம் மேனன் இயக்கியிருந்தார். ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார்.
படம் ஒரு வழியாக கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது. இதுவரை இல்லாத அளவிற்கு நடிகர் சிம்பு உடல் எடையை குறைத்து சூப்பரான நடித்திருந்தார் மேலும் படத்தின் கதைக்கு என்ன தேவையோ அதை அழகாக கொடுத்திருந்தார். இதுவே இந்த படத்திற்கு பிளஸ் ஆக அமைந்தது படம் தொடர்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.
அதன் காரணமாக வசூலும் நன்றாகவே அள்ளி வருகிறது ஐந்து நாட்கள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே இந்த திரைப்படம் 30 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது வருகின்ற நாட்களில் இன்னும் சில கோடிகளை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் வசூல் அள்ள அள்ள படக்குழு செம்ம சந்தோஷத்தில் இருக்கிறது அண்மையில் படத்தின் வெற்றியை படக்குழு கொண்டாடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் மாநாடு படம் போல சிம்புவுக்கு ஒரு வெற்றி படம் என பலரும் ஒரே வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் சிம்புவுடன் நடித்து பெயர் பெற்ற நடிகை திரிஷா அண்மையில் இந்த படம் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.
நடிகை த்ரிஷா : தனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்த மூன்று நபர்களான சிம்பு, கௌதம் மேனன் மற்றும் ஏ ஆர் ரகுமான் இந்த படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளதாது மகிழ்ச்சி என கூறிப்பிட்டார். இந்த செய்தி தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.