இயக்குனர் மணிரத்தினம் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் இவர் பெரும்பாலும் உண்மை மற்றும் நாவல் சம்பந்தப்பட்ட கதைகளை வைத்து படமாக எடுப்பது அவரது ஸ்டைல். அந்த படங்களும் வெற்றி பெற்றுள்ளன இதுவரை மணிரத்தினம் ரஜினி, கமல் போன்ற டாப் நடிகர்களை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்தார்.
இப்பொழுது கூட தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை இயக்கி வருகிறார். அந்த வகையில் தனது கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தை ஒரு வழியாக எடுத்துள்ளார் அது இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது.
இதுவரை இந்த படத்தில் இருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ட்ரைலர், பாடல்கள் என அனைத்தும் வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், திரிஷா, கார்த்தி, விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், பார்த்திபன், பிரபு, கிஷோர், பிரகாஷ்ராஜ் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.
இந்த படம் ரசிகர்களையும் தாண்டி படத்தில் நடித்த நடிகர் நடிகைகளே இந்த படத்தை பார்க்க ஆவலுடன் இருக்கின்றனர். இந்த படம் சிறப்பாக ஓடும் பட்சத்தில் தனது சம்பளத்தை உயர்த்தவும் நடிகர் நடிகைகள் திட்டமிட்டு இருக்கிறார்களாம். இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் நடிகை திரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்திற்காக கிட்டத்தட்ட பல கோடியை சம்பளமாக வாங்கி உள்ளார் இப்படி இருக்க நடிகை த்ரிஷா இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படத்தில் நடிக்க தனது சம்பளத்தை உயர்த்தி வாங்க இருப்பதாக சொல்லி வருகிறாராம் அதன்படி பார்க்கையில் நடிகை த்ரிஷா தனது அடுத்த படத்திற்காக 2 கோடி சம்பளமாக கேட்க இருப்பதாக சொல்லப்படுகிறது..