முன்னணி நடிகையான நடிகை திரிஷா தற்பொழுது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நேற்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்திருந்த இவர் பிங் நிறப் புடைவையில் பேரழகியை ஓவர் டேக் செய்யும் அளவிற்கு மிகவும் அழகா வந்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் தங்களுடைய கவிதைகளால் திரிஷாவை வர்ணித்து வருகிறார்கள்.
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ளது மேலும் பல கோடி பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து உள்ள நிலையில் நேற்று இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கவிஞர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்து இருந்தார்கள். அந்த வகையில் நடிகை திரிஷா,ஐஸ்வர்யா ராய்,நடிகர் கார்த்திக், ஜெயம் ரவி, பார்த்திபன்,சியான் விக்ரம் இவர்களைத் தொடர்ந்து ரஜினிகாந்த் கமலஹாசன் மற்றும் இயக்குனர் சங்கர் ஆகியோர்கள் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்று இருந்தார்கள்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை திரிஷாவும் பங்கு பெற்றார் பிங் நிற புடவையில் பேரழகியாக விழாவிற்கு வந்த நடிகை திரிஷாவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை திரிஷா குந்தவை கதாபாத்திரத்திற்காக நிறைய ஒர்க் பண்ணியதாகவும் செந்தமிழ் பேச மிகவும் கஷ்டப்பட்டதாகவும் அவர் கூறினார்.
நிறைய ரிகர்சல் மற்றும் பயிற்சி எடுத்ததால் நடிப்பதற்கு சுலபமாக இருந்தது இளவரசியாக நடிக்க வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தது அதை நிறைவேற்றிய மணி சாருக்கு நன்றி மேலும் ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த அனுபவம் குறித்து கேட்ட பொழுது அதற்கு பதில் அளித்த திரிஷா எனக்கும் அவருக்கும் இடையே படத்தில் நடக்கும் மோதல் ஹைலைட்டாக இருக்கும் நாங்க என்ஜாய் பண்ணி பண்ணுவோம் என கூறினார்.