தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 19 வருடங்களாக முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை விடாமல் தக்கவைத்து தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்டி வருபவர் தான் நடிகை திரிஷா. இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் அஜித் சூர்யா என அனைவருடைய திரைப்படத்தில் ஜோடி போட்டு நடித்த அது மட்டும் இல்லாமல் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் இடத்தையும் தமிழ் சினிமாவில் பெற்றுவிட்டார்.
ஆனால் தற்சமயம் இவர் தமிழில் பெருமளவு திரைப்படம் நடிக்காமல் தெலுங்கு மட்டுமே அதிக அளவு கவனம் செலுத்தி வருகிறார். மேலும் இவர் நடிக்கும் திரைப்படங்களும் முன்பை போல் இல்லாமல் நல்ல கதை அம்சமுள்ள திரைப்படங்களில் மட்டும் நமது நடிகை நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் சமீபத்தில் மணிரத்னம் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சோழர் ஹீரோயின் கதை கொண்ட ஒரு திரை படத்திலும் திரிஷா நடித்து வருகிறாராம்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகைக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது மட்டும் இல்லாமல் தீவிர சிகிச்சையின் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது இதனை நடிகை திரிஷா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் நான் தற்சமயம் கொஞ்சம் நலமாக உள்ளேன் என கூறி உள்ளார்.
இவ்வாறு நடிகை திரிஷா வெளியிட்ட பதிவானது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவியது மட்டும் இல்லாமல் பல்வேறு ரசிகர் பெருமக்களையும் கண் கலங்க வைத்துவிட்டது என்றே கூறலாம்.