அஜித், விஜய், கமல் என டாப் ஹீரோக்களை குறிவைத்து நடிக்கும் த்ரிஷா சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

Trisha
Trisha

Trisha : மாடல் அழகிகள் தான் சினிமா உலகில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அப்படி 20 ஆண்டுகளுக்கு முன்பே மாடலிங் துறையில் இருந்து வெள்ளி திரைக்கு அடியெடுத்து வைத்தவர் த்ரிஷா. முதலில் சின்ன சின்ன இடங்களில் நடித்து வந்த இவருக்கு “மௌனம் பேசியதே” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

அதனை தொடர்ந்து த்ரிஷா நடித்த ஒவ்வொரு படமே பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றன ஒரு கட்டத்தில் அஜித், விஜய், சூர்யா, விக்ரம், ரஜினி, கமல் போன்ற படங்களில் நடித்து மார்க்கெட்டை பெரிய அளவில் உயர்த்தி தமிழையும் தாண்டி தெலுங்கு என பல மொழிகளில் நடித்த வந்தார் திடீரென நயன்தாரா த்ரிஷாவை பீட் பண்ணினார்.

3 flop படம் கொடுத்த விஜய் NO .1 இடத்துக்கு போட்டி போடுகிறார்.. அந்த நடிகர் போட மாட்டாரா.? பரபரப்பை ஏற்படுத்திய அந்தணன்

மீண்டும் மார்க்கெட்டை பிடிக்க நல்ல கதைகள் நடித்து வந்த இவர் தற்பொழுது நயன்தாராவை ஓவர் டேக் செய்து தமிழில் டாப் ஹீரோக்களின் பட வாய்ப்புகளை அள்ளி வருகிறார் இவர் கடைசியாக நடித்து வெளியான லியோ திரைப்படம் பெரிய வெற்றியை பதிவு செய்தது.

அதனைத் தொடர்ந்து கைவசம் விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் கைகோர்த்து நடித்து வருகிறார் இந்த நிலையில் கமல், மணிரத்தினம் ஜோடி இணைந்துள்ள THUG LIFE திரைப்படத்திலும் த்ரிஷா கமீட் ஆகியுள்ளார் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது த்ரிஷாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதை உறுதிப்படுத்தினார்.

பில்லை காமிக்காமல் ஆட்டம் போட்ட சூனியக்காரிக்கு பிக் பாஸ் வைத்த ஆப்பு.! ஏஜென்ட் டீமுக்கு கிடைத்த சரியான செருப்படி..

இப்படி இருக்கின்ற நிலையில் த்ரிஷாவின் சொத்து மதிப்பு குறித்து நமக்கு தகவல்களை கிடைத்துள்ளது.  அதன்படி பார்க்கையில் த்ரிஷா சொத்து மதிப்பு சுமார் 83 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது ஒரு படத்திற்கு குறைந்தது 6 கோடியிலிருந்து 10 கோடி வரை வாங்குகிறார் என தகவல்கள் சொல்லுகின்றன.