பொதுவாக சினிமாவை பொருத்தவரை நடிகைகள் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே தொடர்ந்து முன்னணி நடிகையாக நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற முடியும் அப்படி அந்த நடிகைகள் சில திரைப்படங்களில் நடித்து வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் மார்க்கெட் குறைந்து விடுவது வழக்கம்.
இவ்வாறு இப்படி ஒரு நிலைமையில் இருந்து வந்தவர் தான் நடிகை திரிஷா தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்த நிலையில் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு படங்களின் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே இவர் இருக்கிறாரா இல்லையா என்பதே கேள்விக்குறியாக இருந்து வந்தது.
அப்படி ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அந்த திரைப்படங்களும் பெரும் தோல்வியை பெற்றது இப்படிப்பட்ட நிலையில் விஜய் சேதுபதியுடன் இணைந்து 96ஸ் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தான் இவருக்கு ரீஎன்ட்ரி கொடுக்கும் வகையில் அமைந்தது. இவ்வாறு இந்த படத்தினை தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் தற்பொழுது பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் குந்தவையாக நடித்திருந்தார்.
இந்த படம் இவருக்கு அமோக வெற்றியைத் தந்த நிலைகளில் இந்த படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்று வருகிறார். அப்படி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் திரிஷா நடிக்கும் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இது பற்றி இதுவரையிலும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை. இப்படிப்பட்ட நிலையில் மேலும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த படத்தில் திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம் இந்த படத்தினை கௌரவம் நாராயணன் இயக்க இருக்கும் நிலையில் மூன்று முன்னணி நடிகர்கள் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.