அஜித்தா.. விஜயா.. நம்பர் ஒன் ஹீரோ குறித்து பேசிய நடிகை திரிஷா.

ajith-thrisha-vijay
ajith-thrisha-vijay

20 ஆண்டுகளுக்கு மேலாக திரை உலகில் நடித்து ஓடிக்கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. முதலில் மாடல் அழகியாக தன்னை வெளிகாட்டிக்கொண்டு பின் சினிமா உலகில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் மௌனம் பேசியதே திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். அதன் பிறகு நடிகை திரிஷாவுக்கு சினிமா உலகில் நல்ல எதிர்காலம் அமைந்தது

தொடர்ந்து அஜித், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற டாப் நடிகரின் படங்களில் நடித்து தன்னை மிகப்பெரிய அளவில் உயர்த்திக்கொண்டார் தொடர்ந்து வெற்றிகளை கண்டு வந்த இவர் ஒரு கட்டத்தில் சோலோ படங்களிலும் நடிக்கும் வாய்ப்பை கைப்பற்றி அடுத்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தி கொண்டார் ரசிகர்களும் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர்

தொடர்ந்து சூப்பராக ஓடினாலும் இவரை தூக்கி சாப்பிடும் அளவிற்கு நயன்தாரா, தமன்னா காஜல் அகர்வால் போன்ற அடுத்தடுத்த புதுமுக நடிகைகள் களம் இறங்கி இவரை ஓவர் டேக் செய்தனர். இருந்தாலும் ஒரு பக்கம் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தார் அந்த வகையில் இவருக்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் மீண்டும் இடம்பிடித்து அசத்தி உள்ளார்

இப்பொழுது இவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் நேர்காணல் ஒன்றில் த்ரிஷாவிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது அதில் ஒன்றாக யார் தற்பொழுது நம்பர் ஒன் என்பது குறித்து கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த திரிஷா நான் நடிக தொடங்குவதற்கு முன்பே அவர்கள் அனுபவமிக்கவர்களாக இருந்திருக்கிறார்கள் அவர்கள் படங்களை ஒரு ஆடியன்ஸாக பார்க்கிறோம்

திரையரங்குகளில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுத்தால் அவர்கள் தங்கள் படங்களை பார்த்து மகிழ்ச்சி ஆக வருகின்றனர். அவர்களுக்கு ரசிகர்கள் மன்றங்கள் இருந்தாலும் இந்த எண்கள் விளையாட்டை நாங்கள் தொடங்கிய ஒன்று என்று நினைக்கிறேன். இருவரும் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்கள்.. யார் பெரியவர் என்று நாம் எப்படி சொல்லிவிட முடியும் என்று திரிஷா கூறி உள்ளார்.