தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகை திரிஷா முதலில் மாடலிங் துறையில் பணியாற்றிய இவர் பல பட்டங்களை பெற்று இருந்தாலும் ஒரு கட்டத்தில் சினிமாவாய்ப்பை பெற்றார். ஆரம்பத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த இவர் மௌனம் பேசியதே திரைப்படத்தில் ஹீரோயின்னாக அவதாரம் எடுத்தார்.
அதன் பிறகு தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தார் ஒரு கட்டத்தில் அஜித் விஜய் ரஜினி கமல் தனுஷ் சூர்யா போன்ற டாப் ஹீரோக்களுடன் நடித்து தன்னை தவிர்க்க முடியாத ஒரு நாயகியாக மாற்றிக் கொண்டார் இப்பொழுதும் சினிமா உலகில் நடித்துக் கொண்டுதான் வருகிறார்.
அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் லியோ படத்தில் ஹீரோயின்னாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் உடன் த்ரிஷா நடிக்க உள்ளதால் செம்ம சந்தோஷத்தில் இருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை திரிஷா சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர்கள் குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார். அதில் அவர் சொன்னது..
உங்களுடன் நடிக்கும் நடிகர்களை நீங்கள் எப்படி அழைப்பீர்கள் என கேள்வி கேட்டுள்ளனர் அதற்கு திரிஷாவும் வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.
நடிகர் தனுஷை D என்றும் அல்லது பிரபு என்ற நிஜப் பெயரை கூப்பிடுவேன். விஜய் சாரை நாங்கள் எப்பொழுதுமே சீட்டா என்று தான் கூப்பிடுவோம் என கூறினார்.
அடுத்தது அஜித் பற்றி அவர் சொன்னது தான் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.. அவருடன் நான் பல வருடமாக பயணிக்கிறேன் ஆனால் அவருடைய போன் நம்பர் என்னிடம் இல்லை ஏனென்றால் அவர் அதிகமாக போன் பயன்படுத்தி பார்த்ததில்லை ஆனால் மொத்தத்தில் அவர் ஒரு நல்ல ஜென்டில்மேன் எனக் கூறினார்.