Trisha speak about Ajith : தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகை திரிஷா. இவர் முதலில் மாடலிங் துறையிலிருந்து பின் வெள்ளி திரைக்கு என்ட்ரி கொடுத்தார். சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தென்பட்டு வந்த இவர் மௌனம் பேசியதே படம் த்ரிஷாவுக்கு பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது.
அதனை தொடர்ந்து அஜித், விஜய், சூர்யா, ரஜினி, விக்ரம் போன்ற நடிகர்களுடன் நடித்து தன்னை தக்க வைத்துக் கொண்டார். 20 வருடங்களுக்கு மேலாக திரையில் நடித்து வரும் திரிஷாவுக்கு இன்னமும் மார்க்கெட் குறையவில்லை பொன்னியின் செல்வன் பார்ட் 1, பார்ட் 2 திரைப்படத்தை தொடர்ந்து கைவசம் லியோ, தி ரோடு..
வெளியானது லியோ சென்சார்.! கெட்ட வார்த்தை வன்முறை காட்சி நிறைய இருக்கோ.?
ராம் பார்ட் 1, ஐடெண்டிட்டி, விடாமுயற்சி, சதுரங்க வேட்டை 2 ஆகிய படங்கள் இருக்கின்றன இதில் முதலாவதாக தி ரோடு திரைப்படம் வெளியாக இருக்கிறது ஆனால் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது லியோ திரைப்படத்தை தான் ஏனென்றால் இந்த படத்தில் திரிஷாவுடன் இணைந்து விஜய், சஞ்சய் தத், அர்ஜுன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திரிஷா பழைய பேட்டி ஒன்றில் அஜித் குறித்து பேசியது இணையதள பக்கத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது. விஷால் உடன் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார் அப்பொழுது சொன்னது என்னவென்றால்..
திரிஷாவுக்கு மரண பயத்தை காட்டிய தாஸ்.. வைரலாகும் லியோ “புதிய போஸ்டர்”
எனக்கு சினிமாவில் விஷால் மற்ற நடிகர்களை பிடிக்கும் ஆனால் என்னுடைய பேவரைட் என்றால் அது நடிகர் அஜித்குமார் தான் ஏனென்றால் அவர் ஒரு மல்டி ரோல் பண்ணக்கூடிய ஒரு ஆள், அதேசமயம் அவர் ஃபேமிலிக்காக ரொம்ப இடம் கொடுப்பார் அழகாக பார்த்துக் கொள்வார் என திரிஷா பேசி உள்ள வீடியோ இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு அஜித் ரசிகர்கள் லைட்டுகளையும் தட்டி வீசி வருகின்றனர்.