Actress Trisha: இயக்குனர் செல்வராகவன் ட்வீட்டிற்க்கு பத்து ஆண்டுகள் கழித்து நடிகை த்ரிஷா பதில் கூறியுள்ளார். நடிகர் வெங்கடேஷ், திரிஷா நடிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு அடாவாரி மாட்டலக்கு அர்த்தாலு வேருலே என்ற திரைப்படம் தெலுங்கில் வெளியானது. பிறகு தமிழில் தனுஷ், நயன்தாரா கூட்டணியில் யாரடி நீ மோகினி என்று பெயர் வைக்கப்பட்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றினை பெற்றது.
இந்த படம் தெலுங்கில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து வெங்கடேஷ் கேரியரில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அப்படி நடிகர் வெங்கடேஷ், திரிஷா ஆகியோர்களின் கூட்டணியில் கடந்த 20007ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான அடாவரி மாட்டலக்கு அர்த்தாலு வேருலே என்ற படத்தை செல்வராகவன் இயக்கத்தில் தமிழிலும் சூப்பர் ஹிட் அடித்தது.
இதில் தனுஷ், நயன்தாரா ஆகியோர்கள் நடித்திருந்த நிலையில் யாரடி நீ மோகினி என்ற பெயரில் ரீமேக்காகி வசூலை குவித்தது. வெங்கடேஷ் மற்றும் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் இவர்களுடைய மகன்-அப்பா உறவை மிகவும் சிறப்பாக செல்வராகவன் வெளிப்படுத்தினார். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வெங்கடேஷ், த்ரிஷா இடையிலான காதலும் சிறப்பாக அமைந்ததால் குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருந்தது.
இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த படத்தினை பார்த்ததாகவும் வெங்கடேஷ் மற்றும் திரிஷாவுடன் இணைந்து இந்த படத்தில் பணியாற்றியது மிகச் சிறந்த அனுபவம் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் இயக்குனர் செல்வராகவன். மேலும் இந்த படத்தின் இரண்டாவது பாகவும் தயாராக உள்ளதாக கடந்த 2013ஆம் ஆண்டு தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இந்த ட்வீட்டிற்க்கு தற்பொழுது நடிகை த்ரிஷா பதில் அளித்துள்ளார். நான் இந்த படத்தில் நடிப்பதற்கு ரெடி என்று அவர் தன்னுடைய ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். 10 ஆண்டுகள் கழித்து தற்போது செல்வராகவன் ட்வீட்டிக்கு பதில் அளித்துள்ளார். எனவே இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.