பொன்னியின் செல்வன் படத்திற்காக ரொம்ப கஷ்டப்பட்டேன் – வெளிப்படையாக பேசிய நடிகை திரிஷா.!

trisha
trisha

80 காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் பல்வேறு திரைப்படங்களை இயக்கி வெற்றியடைந்தவர் இயக்குனர் மணிரத்தினம். இவர் இதுவரை ரஜினி, கமல் போன்ற டாப் பிரபலங்களை வைத்து வெற்றி கண்டுள்ளார் இப்பொழுதும் சினிமா உலகில் தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார்..

அந்த வகையில் இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படம் பொன்னியின் செல்வன்.. இந்த படத்தை எடுக்க பல தடவை அவர் முயற்சித்தாலும் தோல்வியை தழுவின.. கடைசியாக டாப் தயாரிப்பு நிறுவனமான லைக்கா மற்றும் மெட்ராஸ் டாக்கிஸ் ஆகிய இரு நிறுவனத்துடன் கைகோர்த்து மணிரத்தினம் தற்பொழுது பொன்னியின் செல்வன் படத்தை எடுத்துள்ளார்.

இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு செய்துள்ளார். முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ஜெயம் ரவி பிரகாஷ்ராஜ் பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம், கார்த்தி, விக்ரம்,  பிரபு, ஜெயராம், விக்ரம் பிரபு,  சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர் இந்த படத்தில் இருந்து  இதுவரை  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல்கள், டீசர்  என ஒவ்வொன்றும் வெளிவந்து மக்களை கவர்ந்து இழுத்தது.

இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது.  இப்படி இருக்கின்ற நிலையில் இன்று இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ லான்ச் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் நடிகை த்ரிஷா சில தகவல்களை பகிர்ந்து உள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது என்னவென்றால் செந்தமிழுக்கு ரொம்ப கஷ்டப்பட்டேன் ஷூட்டிங் செல்லும் போது ஈசியாக இருந்தது அதற்கு முன்னாலேயே பலமுறை ரிகர்சல் செய்து விட்டோம் அதனால் அப்பொழுது ஈசியாக இருந்தது என நடிகை திரிஷா கூறினார். இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.