39 வயதில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இப்படியா செல்வது.! திரிஷா வெளியிட்ட புகைப்படத்தை..

தற்பொழுதெல்லாம் சின்னத்திரை நடிகைகள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் நாள் தோறும் தங்களது புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அதுவும் முன்பெல்லாம் ஒரு நடிகையை பற்றி ரசிகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அது மிகவும் கடினம் திரைப்படங்களில் பார்த்து ரசிக்க மட்டுமே முடியும் ஆனால் தற்போது அனைத்து முன்னணி நடிகைகளும் இந்த நிமிஷத்தில் எங்கிருக்கிறார் அடுத்தது எங்கு செல்கிறார் என்பது வரை என அனைத்தையும் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் மற்ற நடிகைகளைப் போலவே சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருபவர் தான் பிரபல முன்னணி நடிகை திரிஷா. இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமடைந்துள்ளார்.அதோடு விஜய், ஜெயம் ரவி என ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்துள்ளார்.

இவ்வாறு தொடர்ந்து 25 ஆண்டுகளாக சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் இவர் சமீப காலங்களாக திரைப்படங்களில் பெரிதாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என தடுமாறி வருகிறார். முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வந்த இவருக்கு இடையில் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை எனவே திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவருக்கு விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

இத்திரைப்படத்திற்கு பிறகு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் இந்நிலையில் சமீப காலங்களாக இவருக்கு புதிதாக சினிமாவிற்கு அறிமுகமாகும் நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதற்கான வாய்ப்பு தான் கிடைத்து வருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று திரிஷா தனது அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.