என்னதான் ஒரு நடிகை தனது இளம் பருவத்தில் தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தாலும் குறிப்பிட்ட வயதிற்கு பிறகு அவர்களால் ஒரு திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க முடியாது அப்படி தனது இளம் பருவத்தில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கனவுக் கன்னியா மாறி தற்பொழுது திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பில்லாமல் தள்ளாடி வருபவர்தான் நடிகை திரிஷா.
இவர் தமிழ், தெலுங்கு என தொடர்ந்து நடித்து மிகவும் பிசியாக இருந்துவந்தார். தமிழில் அஜித், விஜய், ரஜினி, விக்ரம் என தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருந்தார். இவர் நடிப்பில் கடைசியாக பரமபத விளையாட்டு என்ற திரைப்படம் வெளிவந்தது ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை பிறகு சரியான வாய்ப்பு எதுவும் அமையவில்லை.
ஆனால் சினிமாவில் வளர்ந்து வரும் அல்லது அறிமுகமாகும் நடிகர்களின் திரைப்படங்களில் மட்டும் ஹீரோயினாக நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்து வந்துள்ளதாக தகவல் வெளிவந்தது. திரிஷா நடிகை நயன்தாரா போலவே கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது அதிகாரம் செலுத்த ஆரம்பித்தார்.
இந்த விஷயம் நயன்தாராவுக்கு கை கொடுத்தாலும் திரிஷாவிற்கு கைகொடுக்கவில்லை சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த 96 திரைப்படத்தினை தவிர மற்ற அனைத்து திரைப்படங்களும் பெரும் தோல்வியை தான் தந்தது.இதன் காரணமாக இவருக்கு சில காலங்களாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தது.
தற்போது இவர் பொன்னியின் செல்வன், சதுரங்க வேட்டை போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார் இதனை தொடர்ந்து புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார் இத்திரைப்படத்தினை அருண் வசீகரா இயக்க திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விருக்கிறார். மேலும் இத்திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ்,எம்எஸ்.பாஸ்கர் உள்ளிட்டவர்களும் நடிக்கவுள்ளார்கள்.
இத்திரைப்படத்தில் குக் வித் கோமாளி பங்கு பெற்று வரும் சந்தோஷ் தான் ஹீரோவாக நடிக்கிறார். இவர் ஆர்யாவின் நடிப்பில் வெளிவந்த சார்ப்பாட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து திரிஷாவிற்கு ஜோடியாக நடிக்கிறார். முன்னணி நடிகை திரிஷாவிற்கு இப்படி ஒரு நிலைமையா என பரிதாபப்பட்டு வருகிறார்கள்.