சினிமா உலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து ஓடிக் கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. ஆரம்பத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் மௌனம் பேசியதே திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதன் பிறகு இவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் ஹீரோயின் ஆக நடிக்க வந்தது
ஒவ்வொன்றையும் சரியாக தேர்வு செய்து நடித்து வெற்றியை கண்டார் ஒரு கட்டத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து உச்ச நட்சத்திர நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, விஜய் சேதுபதி போன்றவர்களுடன் நடித்து மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார் தொடர்ந்து தமிழில் வெற்றி கண்டு வந்த இவர் பிற மொழிகளிலும் நடித்தார்.
அந்த வகையில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி ஓடிக் கொண்டிருக்கும் இவர் கடைசியாக நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூல் ரீதியாக 500 கோடிக்கு மேல் அள்ளி அசத்தியது. இந்த திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்
அதன் பிறகு நடிகை திரிஷாவுக்கு தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது. இதனால் அவர் செம சந்தோஷத்தில் இருப்பதுடன் மட்டுமல்லாமல் விட்ட இடத்தை பிடித்திருக்கிறார் இந்த நிலையில் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் வகையில் தொடர்ந்து கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அதுபோல தற்போது டைட்டான ட்ரெஸ்ஸில் செம க்யூட்டாக அவர் நடந்து சென்ற பொழுது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வயசு ஏற ஏறத்தான் உங்க அழகு கூடுது செம சூப்பரா இருக்கீங்க என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ நடிகை திரிஷாவின் லேட்டஸ்ட் கிளிக்..