40 வயதை கடந்தும் அழகில் ஜோலிக்கும் நடிகை திரிஷா.! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..

trisha 2

நடிகை த்ரிஷா தன்னுடைய மார்க்கெட்டை மீண்டும் பெற்றுள்ளார் என்று தான் கூற வேண்டும் இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் ராங்கி திரைப்படத்தின் பிரமோஷன் பணிகளில் மிகவும் பிசியாக இருந்து வரும் நிலையில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை என்ற இளவரசி கதாபாத்திரத்தை நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளார்.

இந்த படத்தின் வெற்றினை அடுத்து இவருடைய மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்துள்ளது எனவே சமீப காலங்களாக இவருக்கு தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் மற்றும் அஜித் ஆகியோர்களுக்கு ஜோடியாக தளபதி 67 மற்றும் தல ஏகே 2 திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து தற்போது இவருடைய நடிப்பில் ராங்கி திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை எங்கேயும் எப்போதும் படத்தினை இயக்கிய இயக்குனர் சரவணன் தான் ராங்கி படத்தினையும் இயக்கியுள்ளார் மேலும் ஏஆர் முருகதாஸ் கதை எழுதியுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் திரிஷா இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ள நிலையில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக படக்குழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

trisha 1
trisha 1

மேலும் இருந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட த்ரிஷா ஏராளமான தகவல்களை பகிர்ந்து கொண்டார் எனவே இவருடைய புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்த நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் 40 வயதிற்கு மேல் ஆனாலும் கொஞ்சம் கூட இளமை குறையாமல் மிகவும் அழகாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

trisha

மேலும் இவருடைய புகைப்படம் வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான லைக்குகளையும், கமாண்டுகளையும் பெற்றுள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் தல, தளபதியின் திரைப்படத்தில் இவர் இணைந்து நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார்கள் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.