பொதுவாக நடிகைகள் என்றாலே குறிப்பிட்ட காலம் வரை மட்டும் தான் அவர்களால் தொடர்ந்து திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க முடியும் பிறகு அவர்களின் மார்க்கெட் குறைந்துவிடும் அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை திரிஷா.
இவர் பிரசாந்த் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஜோடி திரைப்படத்தில் சிம்ரனுக்கு தோழியாக சிறிய கதாபாத்திரத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். பிறகு மூன்று வருடங்கள் கழித்து நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இந்த திரைப்படத்தில் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் இவருக்கு தொடர்ந்து மனசெல்லாம், சாமி, லேசா லேசா, கில்லி, ஆயுத எழுத்து என தொடர்ந்து மிகப்பெரிய ஹிட் பெற்ற திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். அந்த வகையில் விஜய், அஜித், சூர்யா,விக்ரம் என தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும், தெலுங்கு நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்து தென்னிந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறந்தார்.
பிறகு முப்பத்தி எட்டு வயதாகியும் திருமணம் செய்யாத காரணத்தினால் தனிமையில் இருந்து வந்த இவரைப் பற்றிய பல தவறான தகவல்கள் இணையதளத்தில் வைரலாகி வந்தது. இதன் காரணமாக இவர் தனது மொத்த மார்க்கெட்டை இழந்தார்.
இவர் திருமணம் செய்யாதிருக்க முக்கிய காரணமாக இவரின் காதல் தோல்வி தான் இருந்து வந்தது. அந்த வகையில் வருன் பிரியன் என்பவருடன் நிச்சயதார்த்தம் வரை சென்ற சில காரணங்கள் அப்படியே அந்த விஷயம் நின்றது. பிறகு தெலுங்கு நடிகர் ராணா டக்குபட்டியுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார்.
இது உண்மைதான் என்று பலரும் கூறி வந்தார்கள். மேலும் சுச்சி லீக் மூலம் திரிஷா ராணா இருவரும் ஒன்றாக இருந்த ஏராளமான புகைப்படங்கள் இணையதளத்தில் லீக் ஆனது. திரிஷாவின் புகைப்படங்கள் மட்டுமல்லாமல் ஹன்சிகா, நயன்தார என தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர் நடிகைகளும் சர்ச்சையில் சிக்கினார்.
மேலும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக இருந்த பீட்டாவிடன் பிராண்ட் அம்பாசிடராக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்தார் த்ரிஷா. இவ்வாறு அனைத்தும் ஒன்றாக நடந்ததால் த்ரிஷாவின் வாழ்க்கை சின்னாபின்னமாகி கேள்விக்குறியாக இருந்து வந்தது. பிறகு சிறிய இடைவேளிக்கு பிறகு மீண்டும் திரிஷா 96 திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து தற்போது இன்னும் சில திரைப்படங்களில் நடித்து மீண்டும் சினிமாவில் பிரபலமடைந்து வருகிறார்.