பொன்னியின் செல்வன் படத்திற்குப் பிறகு திரிஷாவின் மார்க்கெட் எங்கோ சென்று விட்டது. திரும்பும் பக்கம் எல்லாம் இளவரசி இளவரசி என அவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் முன்பு இருந்ததை விட அவர் இப்போது தங்கம் போல் ஜொலிப்பது தான். 40 வயதை கடந்திருந்தாலும் இன்னும் 16 வயது பெண் போல் இருக்கிறாரே என த்ரிஷாவை பார்த்து மயங்காத இளைஞர்களே இருக்க முடியாது.
அதனாலேயே இப்போது அவருக்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. லியோ படத்திற்கு பிறகு கோட் படத்தில் அவர் விஜய் உடன் ஒரு குத்தாட்டம் போட்டிருந்தார். அதை அடுத்து அவர் நடித்துள்ள விடாமுயற்சி படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இப்படி பிஸியாக இருக்கும் அம்மணி கல்யாணம் எப்ப என்று கேட்டால் மட்டும் சரியான பதிலை சொல்வதில்லை. அதேசமயம் நான் சிங்கிள் என கெத்தாக தோழிகளுடன் லைஃபை என்ஜாய் செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது அவர் தோழிகளுடன் வெளிநாட்டுக்கு சென்றுள்ள போட்டோவை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு லைக்குகளை அள்ளி கொடுத்து வருகின்றனர்.