அஜித்தின் 50வது படமான மங்காத்தாவை தொடர்ந்து மேலும் பிரபல நடிகரின் படத்தில் இணைந்த நடிகை திரிஷா.!

trisha-2
trisha-2

சினிமாவிற்கு அறிமுகமாகி 20 வருடங்களாக தமிழ் உள்ளிட்ட ஏராளமான மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை திரிஷா. ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் நிலையில் இன்று வரையிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல மார்க்கெட்டை பெற்று வருகிறார்.

இதற்கு இடையில் பெரிதாக இவருடைய திரைப்படங்கள் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறாமல் இருந்து வந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்று தந்ததோடு மட்டுமல்லாமல் இவருக்கு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்று தந்து இருக்கிறது.

பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களிலும் குந்தவையாக நடித்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இவ்வாறு இதனை அடுத்து விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் இதனை முடித்துவிட்டு அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து தற்பொழுது ‘கமலஹாசன் 234’ படத்திலும் திரிஷா தான் கதாநாயகி என கூறப்படுகிறது. இந்நிலையில் தனுஷ் இயக்கத்தில் உருவாக இருக்கும் அவரது 50வது படத்தில் திரிஷா கதாநாயகன் நடித்த இருப்பதாகவும் இந்த படத்தை சன் பிரிக்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் எனவும் இந்த படத்தில் திரிஷாவிற்கு முக்கிய கேரக்டர் எனவும் கூறப்படுகிறது.

தனுஷ் தற்பொழுது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிந்தவுடன் த்ரிஷாவுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். இதற்கு முன்பு தனுஷ் உடன் இணைந்து நடிகை திரிஷா கொடி என்ற திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கூடுதல் தகவல் என்னவென்றால் அஜித்தின் 50வது படமான மங்காத்தா படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடித்திருந்த நிலையில் தற்போது தனுஷின் 50வது படத்திலும் திரிஷா நடிக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு கமலஹாசன், அஜித், விஜய், தனுஷ் என அடுத்தடுத்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் திரிஷா நடிக்க இருக்கும் நிலையில் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.