“லியோ” படத்தில் ஆக்சன் பண்ணும் “நடிகை த்ரிஷா”.. காஷ்மீரிலிருந்து வந்ததற்கு இதுதான் காரணம்.?

trisha
trisha

விக்ரம் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் வைத்து “லியோ” என்னும் படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது அதேசமயம் அங்கு இருந்து புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு கொண்டே இருக்கிறது.

லியோ திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு சர்வதேச போதை பொருளை மையமாக வைத்து கதை நகரும் என தெரியவருகிறது. இதில் விஜய் உடன் இணைந்து மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

லியோ படத்தின் ஷூட்டிங் இப்பதான் ஆரம்பித்திருக்கிறது ஆனால் இப்பவே  படத்திற்கான எதிர்பார்ப்பு மிகப்பெரிய உச்சத்தில் இருக்கிறது மேலும் இந்த திரைப்படம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே பல கோடி வியாபாரம் ஆகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது.

நடிகை திரிஷா “லியோ” திரைப்படத்திற்காக காஷ்மீர் சென்று இருந்தார் ஆனால் மூன்று நாட்கள்கூட இருக்கல.. காஷ்மீரிலிருந்து பெட்டி படுக்கை உடன் சென்னை வந்து விட்டார் என பல வதந்திகள் வெளியானது ஆனால் அது எல்லாம் உண்மை இல்லை என்பதை தற்போது உடைத்துள்ளார் த்ரிஷா தனது insta பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு உறுதிப்படுத்தினார்.

த்ரிஷா தற்பொழுது லியோ சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வந்ததற்கு காரணம் இந்த படத்தில் அவருக்கு நிறைய சண்டை காட்சிகள் இருக்கிறதாம்.. ஆனால் மாஸ்டர்கள் இன்னும் வரவில்லை என்பதால் நடிகை த்ரிஷாவுக்கான போஷன் இன்னும் எடுக்கப்படவில்லை அதனால் தான் அவர் சென்னை வந்து உள்ளார் என சொல்லப்படுகிறது. படத்தில் விஜய்க்கு இணையாக ஸ்டண்ட் காட்சிகளில் த்ரிஷா மிரட்ட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.