மலையாள முன்னணி நடிகரின் படத்தில் டாக்டராக நடிக்கும் நடிகை திரிஷா.!

trisha
trisha

சுமார் 20 ஆண்டு காலங்களாக தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்த தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் தான் நடிகை திரிஷா.இவருடைய சிறந்த நடிப்பு திறமையிளும் அழகினாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். மேலும் இவருக்கு வயதான காரணத்தினால் பெரிதாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்த இவர் தற்பொழுது சிறிய இடைவெளிக்கு பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார். அந்த வகைகள் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 90ஸ் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்தார்.

பிறகு தொடர்ந்து நடித்து வரும் இவர் தற்பொழுது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்த வருகிறார். இத்திரைப்படத்திலிருந்து வெளியான இவருடைய போஸ்டரை பார்த்து ரசிகர்கள் என்ன ஒரு அழகு என வர்ணித்து வந்தார்கள். மேலும் இந்த திரைப்படத்திற்காக மிகவும் ஆவலாக காத்து வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து நடிகை திரிஷா ‘தி ரோடு’ என்னும் படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் தமிழில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதேபோல் மலையாள நடிகர் சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இணைந்து ராம் என்கின்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பே வெளிவந்த நிலையில் இத்திரைப்படத்தினை ஜிது ஜோசப் இயக்கி வருகிறார்.

ram
ram

இவர் த்ரிஷ்யம்,பாபநாசம் போன்ற திரைப்படங்களை இதற்கு முன்பு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது.அந்த வகையில் இப்படத்தில் நடிகை திரிஷா டாக்டராக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்பொழுது இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் திரிஷாவும் இணைந்துள்ளார் அந்த வகையில் கொச்சியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இவ்வாறு த்ரிஷாவிற்கு வயதானாலும் கூட மற்ற நடிகைகளை விட தொடர்ந்து பல வருடங்களாக சினிமாவில் நடித்து வரும் ஒரே நடிகை திரிஷா என்று கூறலாம். தற்பொழுது வரையிலும் சினிமாவிலும் ரசிகர்கள் மத்தியிலும் தனது மார்க்கெட்டை குறையாமல் வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.