சினிமா உலகில் நடிகர்கள் 30, 40 வருடம் ஹீரோவாக நடித்து விடுவார்கள் ஆனால் ஹீரோயின்கள் 10 வருடம் சினிமா உலகில் இருப்பது கஷ்டம் அதுவும் அழகு குறையாமல் இருந்தால் மட்டுமே தாக்கு பிடிக்க முடியும்.. ஆனால் நயன்தாராவை தொடர்ந்து சினிமா உலகில் 20 வருடங்களுக்கு மேல சூப்பராக கொடி கட்டி பறந்து வருபவர் திரிஷா.
இவர் தனது சினிமா பயணத்தை ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கிறார் கொஞ்சம் கூட வித்தியாசம் தெரியவில்லை. இப்படியே அழகு குறையாமல் திரிஷா இருக்க என்ன காரணம் என பலரும் கேட்டு வருகின்றனர் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
திரிஷா எப்போதும் தன்னை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்வதற்கு அதிக தண்ணீர் குடிப்பாராம் தண்ணீர் மட்டும் அல்லாமல் பல சாறுகளை அதிகமாக எடுத்துக் கொள்வாராம். டீ, காபி குடிப்பதை விட கிரீன் டீ தான் இவரின் பெரும்பாலான நேரங்களில் தேர்வாக இருக்குமாம் இவரின் காலை உணவு ரொட்டி வகைகள், ஆம்லெட், தயிர் உள்ளிடவை அடங்கி இருக்குமாம்.
தினமும் தன்னுடைய உணவில் சிட்ரஸ் அமிலங்கள் நிறைய உணவுகளை அதிகம் இருக்கும்படி பார்த்துக் கொள்வாராம் அதன்படி எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் பிற சிட்ரஸ் பழங்கள் ஏதாவது அவரது டயட்டிலும் இருக்குமாம் அவர் தினமும் கட்டாயமாக உடற்பயிற்சி செய்வாராம் மேலும் இவர் யோகாசனங்களிலும் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறாராம் திரிஷாவுக்கு நீச்சல் என்றால் மிகவும் பிடிக்குமாம்..
எவ்வளவு நேரம் நீருக்குள் இருக்க சொன்னாலும் அவர் மகிழ்ச்சியாக இருப்பாராம் 40 வயதை நெருங்கும் திரிஷா இளமையாக இருப்பதற்கு பிட்னஸ் மற்றும் அவர் எடுத்துக் கொள்ளும் உணவுகள் தான் காரணம் என சொல்லப்படுகிறது. இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.