பிரமாண்ட கேக்கை ஷூட்டிங் ஸ்பாட்டில் வெட்டி கொண்டாடிய நடிகை த்ரிஷா – என்ன காரணம் தெரியுமா.? வைரல் புகைப்படம் இதோ.

trisha

சினிமா உலகில் பல வருடங்களாக நடித்து வரும் த்ரிஷா இன்னும் இளமையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் தனது திறமையை இன்னும் அதிக அளவில் வளர்த்துக்கொண்டு படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடித்து ஹிட் படங்களை கொடுத்து வருவதால் ரசிகர்கள் இன்னும் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர்.

நடிகை திரிஷா சிறு இடைவெளிக்கு பிறகு தற்போது தொடர்ந்து அதிக படங்களை தன்வசப்படுத்தி உள்ளார். மேலும் நடிகை திரிஷா மீண்டும் டாப் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் கர்ஜனை,  ராங்கி உள்பட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.

அதோடு மட்டுமல்லாமல் மணிரத்தினம் இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் பொன்னின் செல்வன் முதல் படத்திலும் இவர் நடித்துள்ளாராம். பொன்னியின் செல்வன் படத்தில் இவருக்கு முக்கிய கதாபாத்திரம் என்பதால் இந்த திரைப்படம் அவருக்கு இன்னும் நல்லதொரு வரவேற்பை பெற்றுக் கொடுக்கும் என கூறப்படுகிறது.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான 96, பரமபதம் போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு பெயரையும்,  புகழையும் பெற்று தந்தது. இந்த நிலையில் நடிகை திரிஷா சினிமா உலகில் தனது பயணம் இதுவரை 19 ஆண்டுகள் ஆகியுள்ளது.

இத்தனை அறிந்த படக்குழு படப்பிடிப்பு தளத்தில் ப ஸ்பெஷல் கேக் ஒன்றை வர வைத்து திரிஷாவுக்கு கொடுத்து வெட்ட வைத்துள்ளது. இது குறித்து நடிகை திரிஷா தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு கொண்டாடி உள்ளார் இதோ அந்த புகைப்படம்.

trisha
trisha