இடுபழகியின் சாதனையை முறியடித்த நடிகை திரிஷா..! வயசு 38 ஆனாலும் மார்க்கெட் மட்டும் குறையல..!

trisha-1

நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜோடி என்ற திரைப்படத்தில் சிம்ரனுக்கு தோழியாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை திரிஷா.இவ்வாறு பிரபலமான நமது நடிகை அதன் பிறகு சூர்யாவுடன் இணைந்து மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமாகிவிட்டார்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றதன் காரணமாக இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து பல பட வாய்ப்புகளை பெற்ற நமது நடிகை அதன்பிறகு லேசா லேசா என பலர் திரைப்படத்தில் நடித்தது மட்டுமில்லாமல் முன்னணி நடிகை அந்தஸ்தையும் பெற்றுவிட்டார்.

தற்சமயம் நடிகை திரிஷா பாலிவுட் மற்றும் டோலிவுட் என பல சினிமாக்களில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பல்வேறு நடிகர்களின் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

மேலும் நடிகை த்ரிஷா சமீபத்தில் காட்டா மேத்தா என்ற இந்தி திரைப்படத்தில் மூலம் பாலிவுட்டிலும் கால் தடம் பதித்து விட்டார் பொதுவாக நடிகை திரிஷா கமர்ஷியல் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்தார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் ஆனால் சமீபத்தில் கொடி, அரண்மனை, விண்ணை தாண்டி வருவாயா, 96 ஆகிய அனைத்து திரைப்படங்களும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களாக அமைந்தது.

simran
simran

நடிகை திரிஷா திரையுலகிற்கு வந்து 19 ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை கதாநாயகியாக மட்டுமே நடித்து வருகிறார் ஆனால்  நடிகை சிம்ரன் கூட தன்னுடைய 15 ஆண்டுகள் முடிந்த பிறகு அக்கா அம்மா போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

இந்நிலையில் நடிகை த்ரிஷா சமீபத்தில் பொன்னியின் செல்வன், அங்கோ ராங்கி  ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.