கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக கோலிவுட்டில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் தான் நடிகை த்ரிஷா. இவர் நடிப்பில் வெளிவரும் ஏராளமான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில் தற்போது இன்று இவருடைய 39 பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
மாடலிங் துறையில் பணியாற்றி வந்த இவர் மிஸ் இந்தியா பட்டம் பெற்றார் பிறகு காமெடியில் நடித்து வந்து பிறகு ஜோடி திரைப்படத்தின் மூலம் சிம்ரனுக்கு தோழியாக துணை நடிகையாக அறிமுகமானார். பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து நடிகர் சூர்யாவுடன் இணைந்து மௌனம் பேசியதே திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதற்கான வாய்ப்பினை பெற்றார்.
இதன் மூலம் அனைவர் மனதையும் கவர்ந்த இவர் மனசெல்லாம், சாமி, லேசா லேசா போன்ற பல திரைப்படங்களில் நடித்து ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்றார். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ரசிகர்களின் கனவு கன்னியாக கொடிகட்டி பறந்து வருகிறார்.
இவ்வாறு சமீப காலங்களாக இவரின் மார்க்கெட் குறையத் தொடங்கிய உள்ளது தற்போது பெரிதாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார். இவ்வாறு சில வருடங்கள் கழித்து விஜய் சேதுபதியுடன் ஜானும் கதாபாத்திரத்தில் த்ரிஷாவிற்கு மிகப்பெரிய கம் பேக் கொடுக்கும் படமாக இருந்தது.
இந்நிலையில் தற்போது இவர் பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இவர் நடித்திருந்தார் சதுரங்கவேட்டை 2 திரைப்படம் இன்னும் வெளியாகாமல் இருந்து வருகிறது. இவ்வாறு இன்றுடன் இவருக்கு 39 வயது ஆரம்பிக்கின்றது.
ஆனால் இன்னும் இவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருவதால் இவரைப் பற்றிய ஏராளமான தகவல்கள் சமூகவலைதளத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது இவருடைய பிறந்த நாள் என்பதால் திருப்பதிக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வந்துள்ளார் அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.