தமிழ் சினிமாவில் சமீபகாலமாக நடிகர்கள் தங்களுடைய உடலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள் ஏனென்றால் அழகு, கட்டுமஸ்தான உடல் என அனைத்தையும் கவனித்து வருகிறார்கள் அதற்கு அதிக நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்து வருகிறார்கள் இந்த நிலையில் சமீப காலமாக நடிகர்களுக்கு இணையாக நடிகைகளும் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார்கள்.
அப்படிதான் நடிகை டாப்ஸி தமிழ்ழில் ஆடுகளம் ஆரம்பம் காஞ்சனா 2 என சில திரைப்படங்களில் நடித்து வந்தவர் இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தாலும் ஹிந்தியில் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார் தற்பொழுது இவர் கையில் இரண்டு ஹிந்தி திரைப்படங்கள் இருக்கின்றன. தனுசுடன் ஆடுகளம் திரைப்படத்தில் நடிக்கும் பொழுது இவரைப் பார்த்தால் வெள்ளக்கார பெண் போல் இருப்பார்.
ஆடுகளம் திரைப்படத்தில் கொழுக்கு முழுக்கு என இருந்த டாப்சி சில மாதங்களாகவே கடுமையான ஒர்க்கவுட் செய்து நடிகர்களுக்கு இணையாக சிக்ஸ் பேக் வைத்துள்ளார் நடிகைகள் பலரும் பட வாய்ப்பு இல்லை என்றால் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள் அந்த வகையில் டாப்ஸி கிளாமர்ரான புகைப்படத்தை வெளியிடாமல் உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பேக் வைத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த பல முன்னணி நடிகைகள் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்துள்ளார்கள் அந்த வகையில் ஹீமா குரோஷி உள்ளிட்ட பல நடிகைகள் இதை பார்த்து ஆச்சரியப்பட்டு அவரை பாராட்டி வாழ்த்தி வருகிறார்கள்.
இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் அதிக லைக் பெற்று வைரலாகி வருகிறது.