முன்னணி நடிகையான தமன்னா தனது காதலருடன் கருப்பு நிற உடையில் சம ஹாட்டாக சுற்றிவரும் நிலையில் அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தமன்னா தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்று வருகிறார்.
மேலும் சமீப காலங்களாக இவருடைய நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் இருந்து வருவதனால் சினிமாவில் இவருடைய மார்க்கெட் குறைந்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும். எப்படியாவது இழந்த மார்க்கெட்டை பெற வேண்டும் என்பதற்காக கமர்சியலாக மட்டுமல்லாமல் சோலோ படங்களிலும் நடித்து வரும் நிலையில் அதுவும் வேலைக்காகவில்லை.
எனவே சினிமாவிற்கு அறிமுகமாகும் இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் நிலைமை ஏற்பட்டுள்ளது. விக்ரம், விஜய், அஜித், கார்த்தி என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த வந்த தமன்னா சில வருடங்களாக தமிழ் திரைப்படங்களை விட்டு விட்டு மற்ற மொழி திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அரண்மனை 4 திரைப்படத்தில் கமிட்டாகி இருக்கும் நிலையில் மேலும் இன்னும் சில திரைப்படங்களையும் கைவசம் வைத்திருக்கிறாராம். இவ்வாறு பிஸியாக இருந்து வரும் தமன்னா தற்பொழுது பாலிவுட் நடிகர் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறார் என கூறப்படுகிறது.
மேலும் ஏராளமான கிசுகிசுப்புகள் இவரைப் பற்றி வெளியான நிலையில் தற்போது அது உறுதியாகியுள்ளது. அந்த வகையில் பாலிவுட் சினிமாவின் இளம் நடிகர் விஜய் வர்மாவை தான் தமன்னா காதலித்து வருகிறார். அப்படி இவர்கள் இருவரும் பார்டியின் பொழுது குஜாலாவாக இருந்த புகைப்படங்கள் தமன்னா விஜய் வர்மாவிற்கு கொடுத்த முத்த வீடியோக்கள் ஆகியவை சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் தற்போது இவர்கள் இருவரும் கருப்பு நிறையில் சுற்றி தெரியும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.