தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா இவர் தமிழில் முதன்முதலாக கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார் இவ்வாறு இவர் அறிமுகமான முதல் திரைப்படம் இவருக்கு சரியான வெற்றியை கொடுக்காவிட்டாலும் அதன்பிறகு இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய் அஜித் சூர்யா என அனைவருடனும் ஜோடி போட்டு நடித்த நடிகை தமன்னா தற்போது தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஆரம்பத்தில் கமர்சியல் நாயகியாக திரையில் கலக்கி வந்த நடிகை தமன்னா தற்போது கதைக்கு நாயகியாகவும் தன்னுடைய திறனை வெளிக்காட்டி வருகிறார் அந்த வகையில் நடிகை தமன்னா சமீபத்தில் நடித்த படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் நமது நடிகை இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த வேளையில் தற்போது அறுபத்தி ஆறு வயது உள்ள ஒரு நடிகருடன் ஜோடி போட்டு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன அந்த நடிகர் வேறு யாரும் கிடையாது தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தான்.
இவர் சில நாட்களுக்கு முன்பாக அரசியலில் மிகத் தீவிரமாக இறங்கி வேலை செய்து கொண்டிருந்தார் இந்நிலையில் தற்போது அரசியலுக்கு டாட்டா காட்டிவிட்டு சினிமாவில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில் இவர் ரீஎன்ட்ரி கொடுத்தாலும் இவருடைய திரைப்படங்கள் பெருமளவு வசூலிலும் சாதித்து வருகிறது.
அந்தவகையில் தற்போது மலையாள திரைப்படமான லூசிபர் திரைப்படத்தில் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார் இத்திரைபடமானது அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் திரைப்படத்தின் ரீமேக் தான் அந்தவகையில் இந்த திரைப்படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் மற்றும் கதாநாயகியாக காஜல் நடிக்க இருந்தார்.
பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை பெரிய அளவு சம்பளம் பேசப்பட்டு தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். அந்த வகையில் நடிகை தமன்னா எனக்கு கதை முக்கியம் கிடையாது பணம் தான் முக்கியம் என்று கூறி ஓகே சொல்லிவிட்டாராம்.