actress tapsee vacation in maladhives photos viral: தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகிய ஆடுகளம் திரைப் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் டாப்ஸி, இதனைத் தொடர்ந்து வந்தான் வென்றான், அஜித்துடன் ஆரம்பம், காஞ்சனா 2 ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் நடித்து வருகிறார், ஹிந்தியில் நாம் ஷாபனா, பிங்க், ஜித் வா 2, சூர்மா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் மேலும் ஹிந்தியில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார் டாப்ஸி.
தமிழில் தற்பொழுது விஜய் சேதுபதியுடன் அனபெல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார், இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியும் டாப்ஸியும் இரண்டு வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது, இந்த திரைப்படத்தை இயக்குனரும் நடிகருமான சுந்தர் ராஜனின் மகன் தீபக் சுந்தர் ராஜன் இயக்கும் திரைப்படம் ஆகும்.
இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் ஜெய்ப்பூரில் நடந்தது வந்தது நடிகை ராதிகா சரத்குமார் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சூட்டிங் முடிவடைந்த நிலையில் டாப்ஸி வேக்கேஷன்க்காக மாலத்தீவு சென்றுள்ளார் அவருடன் அவரின் சகோதரியும் சென்றுள்ளார், சமீபகாலமாக ஹீரோயின்களின் கோடை ஸ்பாட்டா மாலத்திவு இருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் கூட மௌனி ராய் அங்கு சென்றிருந்தார். அங்கு அசத்தலான புகைப் படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அவரை தொடர்ந்து தற்போது டாப்சியும் சென்றுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.