டூப் போடாமல் வவ்வால் போல் அந்தரத்தில் டைவ் அடிக்கும் நடிகை தன்சிகா.! வீடியோவை பார்த்து மிரளும் ரசிகர்கள்.

dhanshuka
dhanshuka

2009ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் பேராண்மை. இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி என்சிசி மாஸ்டராக நடித்திருப்பார். மேலும் படத்தில் நடிகை தன்ஷிகா போல்டான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து வந்தார். மேலும் தன்ஷிகா ரஜினி நடிப்பில் வெளியாகிய கபாலி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

thanshika
thanshika

இவர் நடித்த திரைப்படங்கள் ஓரளவு ரசிகர்களிடம் பிரபலமடைந்ததால் இவரும் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்து விட்டார். மேலும் இவர் தற்பொழுது யோகி டா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்திற்காக ஒரு சிறிய காட்சியில் தலைகீழாக அந்தரத்தில் தொங்கி டைவ் அடிக்கும் காட்சிகள் எடுக்கப்பட்டு உள்ளது.

அப்பொழுது எடுக்கப்பட்ட படப்பிடிப்பு காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் அதிகமாக ஆக்ஷன் காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்காக தன்ஷிகா டூப் இல்லாமல் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

thanshika
thanshika

இந்த நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு தன்ஷிகா படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில ஆக்ஷன் காட்சிகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டு மகளிர் தின வாழ்த்தை பகிர்ந்துள்ளார்.  இவரின் இந்த தைரியத்தை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

தலைகீழாக டைவ் அடிக்கும் வீடியோ