தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷால். இவருடைய நடிப்பில் வெளிவரும் ஏராளமான திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில் விஷால் நடிப்பில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் கத்தி சண்டை. அதிக எதிர்ப்புகளுக்கு இடையே திரையரங்கில் ரிலீஸ் ஆன இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் தோல்வியை அடைந்தது.
இந்த படத்தில் நடிகை தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் அனைத்து படங்களிலும் எளிமையான நடிப்பு, ஓரளவுக்கு கவர்ச்சி என நடித்து வந்த தமன்னாவை ஆரம்பத்தில் கத்தி சண்டை இயக்குனர் சுராஜ் அதிக கவர்ச்சியை காட்ட சொல்லி உள்ளாராம் அதற்காக ஒரு கோடி ரூபாய் சம்பளமும் கொடுக்கப்பட்டதாம்.
எனவே இவ்வாறு கோடியில் சம்பளத்தை வாங்கிய தமன்னா படத்தின் மேல் இருந்த ஆசையினால் கவர்ச்சியில் தாராளம் காட்டி நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதிக சம்பளத்தை பெற்று தமன்னா நடித்திருந்தாலும் இந்த படம் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததால் தமிழில் இவருடைய மார்க்கெட் குறைய தொடங்கியது.
மேலும் தற்பொழுது வரையிலும் பெரிதான பட வாய்ப்புகளை பெறாமல் இருந்து வந்த நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பை பெற்றுள்ளார் இந்த படம் இவருக்கு இழந்த மார்க்கெட்டை மீட்டு தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு தமிழில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதால் பாலிவுட் சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் அந்த வகையில் தொடர்ந்து எல்லை மீறிய கவர்ச்சியில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது அதோடு மட்டுமல்லாமல் இவர் ஆண் நண்பர்களுடன் சுற்றி தெரியும் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.