தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் மராத்தி இந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். தமிழில் கேடி என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார் அதன்பிறகு கல்லூரி திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.
மேலும் தனுசுடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன், விஜயுடன் சுறா என தொடர்ந்து மூன்று முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்து வந்தார். மேலும் இவர் நடிப்பில் வெளியாகி கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம் பையா ஆகிய திரைப் படங்களும் அடங்கும். அதுமட்டுமல்லாமல் தில்லாலங்கடி, சிறுத்தை, வேங்கை ,வீரம் ,பாகுபலி , தோழா ,தர்மதுரை என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஆரம்ப காலத்தில் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னாவுக்கு சமீபகாலமாக பெரிதாக தமிழ் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை அதனால் ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் தமன்னாவும் ஒருவர் இவர் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு வருவார்.
அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும். தற்போது வெயில் காலம் அதிகரித்துள்ளதால் பல நடிகைகள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகிறார்கள் அந்த வகையில் தமன்னாவுக்கு மாலத்தீவு சென்றுள்ளார் அங்கு 2 பீஸ் உடையில் ஹாயாக காத்து வாங்கும் வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Thalaivi @tamannaahspeaks @ Maldives. #Tamannaah #TamannaahBhatia pic.twitter.com/FH3kJCMnnP
— Trends Tamannaah FC™ (@TrendsTamannaah) March 19, 2022