Tamannaah : தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வருபவர் தமன்னா இவர் நல்ல கதையை தேர்வு செய்து தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தார் அந்த வகையில் கல்லூரி, படிக்காதவன், அயன், பையா, கண்டேன் காதல் என சொல்லிக் கொண்டே போகலாம்..
அந்த அளவிற்கு பல ஹிட் படங்களை தமிழில் கொடுத்த இவர் ஒரு கட்டத்தில் பிற மொழிகளில் நடித்தார். இதனால் தமிழ் சினிமாவில் அவ்வபொழுது தலைகாட்டி தொடங்கினார். அப்படி கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ஆக்சன் படம் சுமாரான படமாக அமைந்ததை..
தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் சுத்தமாக கிடைக்கவே இல்லை.. இதனால் அவர் ஹிந்தி மற்றும் தெலுங்கில் அதிகம் ஆர்வம் காட்டி நடித்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தான் ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள காவலா பாடலில் தமன்னா கிளாமர் நடனமாடி அசத்தியுள்ளார்.
ஜெயிலர் படம் வெளிவர இன்னும் குறைந்த நாட்களில் இருப்பதால் தமன்னா பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார் அப்படி அண்மையில் பேட்டி ஒன்றில் நடிகர் நடிகைகளை பற்றி வெளிப்படையாக பேசி உள்ளார். தற்போது தமன்னா தனுஷை பற்றி பேசியது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.
எனக்கு மிகவும் பிடித்த நடிகர்கள் ஒருவர் தனுஷ். மும்பைக்கு வரும் போது போன் பண்ணுங்க என்று சொல்லுவேன் ஆனால் அவர் பண்ணவே மாட்டார் அதனால் தான் அவர் மீது எனக்கு கோபம் என்று கூறினார் தமன்னாவும், தனுஷ் இணைந்து நடித்த படிக்காதவன், வேங்கை போன்ற படங்கள் பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.