பான் இந்திய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தமன்னா தொடர்ந்து அடுத்தடுத்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் சமீப காலங்களாக இவருடைய மார்க்கெட் ரசிகர்கள் மத்தியில் குறைந்துள்ளது என்று கூறலாம் ஏனென்றால் சொல்லும் அளவிற்கு இவருடைய நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் இருந்து வருகிறது.
அப்படி இவர் ஹீரோக்களுக்கு ஜோடியாக மட்டுமல்லாமல் சோலோவாகவும் நடித்து வரும் நிலையில் அதுபோன்ற படங்களுக்கு ஓரளவுவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் வெளியாக இருக்கிறது. எனவே இதற்கு மேல் பட குழுவினர்கள் போஸ்ட் ப்ரோமோஷன் பணிகளை மேற்கொள்ள இருக்கின்றனர். இவர் இந்த படத்தினை அடுத்து அடுத்த அடுத்த திரைப்படங்களில் தமன்னா ஒப்பந்தமாகி வரும் நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இதன் மூலம் முதன்முறையாக இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது. ஆனால் சில காட்சிகளில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி திடீரென விலகியதால் அவர் நடித்திருக்கும் ஹீரோ ரோலில் சுந்தர் சி நடித்து வருகிறார். மேலும் அவர்களை தொடர்ந்த இந்த படத்தில் ராஷி கண்ணாவும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
அப்படி சுந்தர் சிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார் என கூறப்படுகிறது ஆனால் தமன்னா யாருக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது பற்றி இதுவரையிலும் தகவல் வெளியாகவில்லை இந்நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகர் சந்தோஷ் பிரதாப் முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறாராம் எனவே தமன்னாவுக்கு ஜோடியாக சந்தோஷ் பிரதாப் நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என கூறப்படுகிறது.
நடிகர் சந்தோஷ் பிரதாப் ஓ மை கடவுளே, சார்பட்டா பரம்பரை, சமீபத்தில் வெளிவந்த கழுவேந்தி மூர்க்கன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் மேலும் முக்கியமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி சீசன் 3ல் பங்குப்பெற்று பலருடைய மனதைக் கவர்ந்தார்.