சொந்தமாக நகைக்கடை, பிசினஸ் என கலக்கும் தமன்னாவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

tamannaah
tamannaah

Actress Tamannaah Bhatia: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான தமன்னா அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். சமீப காலங்களாக வெப் சீரிஸ்சில்  நடித்து கலக்கி வரும் இவர் தற்போது வரையிலும் ரசிகர்களின் மத்தியில் மவுசுக்குறையாத நடிகையாக விளங்குகிறார்.

அந்த வகையில் கடந்த 2005ஆம் ஆண்டு திரைவுலகிற்கு அறிமுகமான இவர் 17 ஆண்டு காலங்களாக பல வித்தியாசமான கேரக்டர்களில் நடித்துள்ளார். அப்படி 33 வருடங்களாக சினிமாவில் பிஸியாக இருந்து வரும் தமன்னா ஹிந்தி திரைப்படத்தின் மூலம் தான் தனது கேரியரை தொடங்கியுள்ளார். இதனை அடுத்து தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் பிறகு பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இவ்வாறு சினிமாவில் புகழும் உச்சத்தில் இருக்கும் தமன்னா ஒரு படத்திற்கு 12 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வரும் தமன்னாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அப்படி ஒரு படத்திற்கு சுமார் 12 கோடி சம்பளம் வாங்கி வரும் இவர் திரைத்துறையை தவிர பல நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாசிடராக இருந்து வருகிறார். இதனை அடுத்து ஒரு பாடலுக்கு ஐட்டம் சாங் ஆடுவதற்கு சுமார் 60 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுகிறார் எனவும் கூறப்படுகிறது.

அப்படி கடந்த 2018ஆம் ஆண்டு ஐபிஎல் திருவிழாவில் 10 நிமிடம் நடனமாடியதற்கு சுமார் 50 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு இதனை அடுத்து மும்பை நகரில் சுமார் 16 கோடி ரூபாய் மதிப்புள்ள  பிரம்மாண்டமான அப்பார்ட்மெண்டில் தமன்னா வசித்து வருகிறார்.

லேண்ட்ரோவர்  டிஸ்கவரி ஸ்போர்ட், எம்யுடபள்யூ 330i, பென்ஸ் மற்றும் மிட்சுபிஷி பஜிரோ ஸ்போர்ட் உள்ளிட்ட  உயர்ரக சொகுசு வாகனங்களை பயன்படுத்தி வருகிறார். மேலும் குறிப்பாக விலை உயர்ந்த கை பைகள் மற்றும் தமன்னாவின் தோழியான உப்பசனா சும்மா 2 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு வைர மோதிரத்தை அவருக்கு அளித்துள்ளார். இதனை அடுத்து தமன்னா சொந்தமாக நகைக் கடை வைத்திருப்பதாகவும் கூறப்படும் நிலையில் மொத்தமாக சொத்து மதிப்பு சுமார் 110 கோடி இருக்கிறதாம்.