ரம்யா கிருஷ்ணன், நயன்தாராவை தொடர்ந்து அம்மன் வேடத்தில் கலக்கும் நடிகை தமன்னா.! புகைப்படத்தை பார்த்து ஆச்சரியப்படும் ரசிகர்கள்.

amman
amman

சினிமா உலகில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் பிரபலங்கள் பலரும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் திறன்பட தனது திறமையை வெளிகாட்டிய அசத்துவது உண்டு. அதில் இவரது திறமையை மிகச் சிறப்பாக இருந்தால் அந்த கதாபாத்திரத்தை மீண்டும் மீண்டும் வெவ்வேறு படங்களில் நடிக்க வைத்து இயக்குனர்கள் அழகு பார்க்கின்றனர்.

அந்த வகையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் சாமி வேடத்தில் அவரை அடிக்க ஆளே இல்லை அம்மன் வேடத்தில் இவர் பல்வேறு படங்களில் நடித்து அசத்தியுள்ளார் அந்த அளவிற்கு சிறப்பாக பொருந்தக்கூடியவர் ரம்யா கிருஷ்ணன் அவரை தொடர்ந்து அம்மன் வேடத்தில் அசத்தியவர்.

டாப் நடிகையான நயன்தாரா இவர் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் அம்மன் அவதாரத்தில் பின்னி பெடல் எடுத்து இருந்தார். இவர்களைத் தொடர்ந்து அந்த லிஸ்டில் தற்போது இணைந்து உள்ளவர் தான் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை வைத்திருக்கும் நடிகை தமன்னாவும் பல்வேறு விதமான கதாபத்திரங்கள் மற்றும் போட்டோ சூட் நடத்தி வருகிறார்

என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் பெரும்பாலும் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படங்களை பெரிதும் வெளியிட்டு வந்த நிலையில் முதல் முறையாக நடிகை தமன்னா அம்மன் அவதாரம் வேடமணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

மேலும் புகைப்படத்தை வெளியிட்டு தமன்னா கூறி உள்ளது “நான் என்னை கடவுளாக உணர்கிறேன்” என கூறி உள்ளார் இதை பார்த்த மற்ற நடிகைகள் இந்த புகைப்படத்தை பார்த்து வாழ்த்து தெரிவித்தை கூறி வருகின்றனர்.

tamanna
tamanna

tamanna