தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தமன்னா. இவருக்கு அண்மைக்காலமாக எதிர்பார்த்தபடி படங்கள் வெற்றி அடையவில்லை. அதனால் தற்போது தமன்னா தமிழை தாண்டி மற்ற மொழிகளில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
இருந்தாலும் தமிழில் சில டாப் நடிகர்களின் பட வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அதை தவிர்க்காமல் நடித்தும் வருகிறார் அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் தமன்னா நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தமன்னாவும் ஜெயிலர் படத்தில் இரவு / பகல் பார்க்காமல் கலந்துகொண்டு நடித்தும் வருகிறார்.
ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுவதுமாக பூர்த்தி செய்யவில்லை அதனால் ஜெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படம் வெற்றி அடைந்தால் ரஜினி மற்றும் தமன்னா ஆகிய இருவரின் மார்க்கெட்டும் உயர அதிக வாய்ப்பு உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அரண்மனை 4 போன்ற பல படங்களையும் தமன்னா கைவசம் வைத்திருக்கிறார்.
இவரது படங்கள் தோல்வியை சந்தித்தாலும் தமன்னாவின் ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் செல்கின்றன. ஏனென்றால் அந்த அளவிற்கு சோசியல் மீடியாவில் படும் கிளாமரான மற்றும் மாடர்ன் ட்ரெஸ்ஸில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். நடிகை தமன்னா படங்களிலும் கிளாமருக்கு குறைச்சல் இல்லாமல் இருப்பவர்..
அதேபோல் பொது நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போதும் கிளாமராகத் தான் செல்வார் அந்த வகையில் தற்போது பிரபல விருது விழா ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் கருப்பு கலர் கோட் மற்றும் கொசுவலை போன்ற பேண்ட் அணிந்து வந்துள்ளார். இது பலரையும் வியப்பாக பார்க்க வைத்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வைரல் ஆகி வருகின்றன..