நடிகை தமன்னா ஜெய்லர் படத்தில் இடம்பெற்றிருக்கும் காவாலா பாடலுக்கு வித்தியாசமாக ஆட்டம் போட்டு இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்திய திரைவுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரஜினி நடிப்பில் கடைசியாக அண்ணாத்த திரைப்படம் வெளியாக நான் நிலையில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை.
எனவே ஒரு வெற்றி திரைப்படத்தை தந்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து வருகிறார். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 169வது படமான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தினை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற திரைப்படங்களை இயக்கி நெல்சன் திலீப் குமார் இயங்கி வருகிறார். இந்த படத்தினை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், தெலுங்கு நடிகர் சுனில், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.
ஜெய்லர் படத்தின் மொத்த படப்பிடிப்பு முடிந்திருக்கும் நிலையில் தற்பொழுது ப்ரோமோஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கும் நிலையில் அருண் ராஜா காமராஜ் எழுதிய ஜெயிலர் படத்தின் முதல் பாடல் கடந்த வாரம் வெளியானது.
அதில் தமன்னாவின் நடனம், ரஜினியின் ஸ்டைல் ஆக்சன் போன்றவை ரசிகர்கள் மனதை கவர்ந்தது. மேலும் இந்த பாடல் தற்போது யூடியூப்பில் மிகவும் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது. காவாலா பாடல் வெளியானதில் இருந்து சோசியல் மீடியாவில் இந்த பாடல் தான் மிகவும் ட்ரெண்டிங்காக இருந்து வரும் நிலையில் இதற்கு பலரும் நடனமாடி வரும் நிலையில் இந்த பாடலுக்கு நடனமாடிய நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடுப்பை வளைத்து நெலித்து வேற லெவல் நடனமாடியிருக்கிறார் அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக வைக்குகளும் குவிந்து வருகிறது.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..