தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு இந்தி என பல்வேறு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக கேடி என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார்.
இவ்வாறு இந்த திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடித்த நிலையில் அதில் ஒரு கதாநாயகியாக நடித்தவர் நடிகை தமன்னா அதன்பிறகு இவர் தமிழில் கல்லூரி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமான அதுமட்டுமில்லாமல் இதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றுவிட்டார்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் கார்த்தி தனுஷ் விஜய் அஜித் என அவருடன் நடித்தது மட்டும் இல்லாமல் சமீபத்தில் நடித்த பாகுபலி என்ற திரைப்படத்தின் மூலமாக உலக அளவில் பிரபலமாகி விட்டார் என்றே சொல்லலாம். ஏனென்றால் அந்த தெலுங்கில் அவருடைய மவுசு உயர்ந்தது மட்டுமில்லாமல் சமீபத்தில் அவருக்கு தெலுங்கில் பட வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் நாகசைதன்யா உடன் இணைந்து தமன்னா ஒரு திரைப்படத்தில் நடிக்க இருந்தார் ஆனால் அந்த திரைப்படத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார். ஏனெனில் தமன்னா சமந்தாவின் நெருங்கிய தோழி என்ற ஒரே காரணத்தினால் தான் இவ்வாறு அவருக்கு இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டதற்கு காரணம் என பலரும் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து தெலுங்கிலும் அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்காத ஒரே காரணத்தினால் அவர் தொடர்ந்து சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.