நடிகை தபு தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி தெலுங்கு மலையாளம் மராத்தி பெங்காலி என பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்தவர் இவர் ஹிந்தியில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் முதன் முதலாக 1997 ஆம் ஆண்டு இருவர் என்ற திரைப்படத்தின் மூலம் செந்தாமரை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதனைத் தொடர்ந்து தமிழில் தாயின் மணிக்கொடி ஆகிய திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
ஆனால் இவருக்கு தமிழில் மிகப் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்த திரைப்படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் தேசம் ஆகிய இரண்டு திரைப்படங்கள் அதுமட்டுமில்லாமல் இன்றும் ரசிகர்களின் ஃபேவரட் திரைப்படங்களில் இந்த இரண்டு திரைப்படமும் இடம்பெற்றுள்ளது. தபுக்கு தற்பொழுது 51 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்.
பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தபு குறித்து பேசி உள்ளார் அதில் அவர் கூறியதாவது தற்பொழுது 51 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்க காரணம் தபு சிறு வயதில் தனக்கு ஏற்பட்ட மனக்கசப்பு காரணம் தான் என கூறியுள்ளார். தபுவின் அப்பா வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தார் அந்த பெண்ணை இரண்டாவது திருமணமும் செய்து கொண்டார்.
அதுமட்டுமில்லாமல் தபுவின் அப்பா தபு மற்றும் தன்னுடைய முதல் மனைவி முன்பு இரண்டாம் மனைவியுடன் ஜோடியாக ஊர் சுற்றுவது அவர்களை வெறுப்பேற்றுவது என வாடிக்கையாக வைத்திருந்தார் இதனால் தபூவின் கண்களுக்கு தன்னுடைய அப்பா சைக்கோ போல் தெரிந்துள்ளார். இந்த நிலையில் தன்னுடைய மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மும்பைக்கு குடியேறினார்கள். தபு சகோதரிக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதனை தொடர்ந்து தபுவுக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத் பிறகுதான் சினிமாவில் கொடி கட்டி பறந்தார்.
இதனை செய்யாறு பாலு சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.