Taapsee: கர்ப்பமான பின்னர் தான் திருமணம் செய்து கொள்வேன் என தனுஷ் பட நடிகை கூறி இருக்கும் தகவல் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகிய 6 தேசிய விருதுகளை வென்ற திரைப்படம் தான் ஆடுகளம்.
இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் டாப்ஸி. இந்த படத்தில் ஆங்கிலேயே இந்தியன் பெண்ணாக நடித்திருந்த நிலையில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று தந்தது. இவ்வாறு ஆடுகளம் படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழில் தொடர்ந்து ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.
மேலும் பாலிவுட் பக்கம் சென்ற டாப்சி அங்கேயே செட்டில் ஆகி உள்ளார் அப்படி பாலிவுட் திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நிலையில் தற்பொழுது இவருக்கு 35 வயது ஆகும் ஆனால் இதுவரையிலும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் டாப்சி தொடர்ந்து தனது ஹாட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் ரசிகர் ஒருவர் எப்பொழுது திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள் என்று கேள்வி கேட்க இதற்கு டாப்ஸி அளித்த பதில் தான் தற்போது சமூக வலைதளத்தில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது.
அதாவது, நான் இன்னும் கர்ப்பமாகவில்லை அதனால் இப்போதைக்கு திருமணத்திற்கு வாய்ப்பு இல்லை என கூறி இருக்கிறார். கர்ப்பமான பிறகு தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என டாப்ஸி கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டில் கர்ப்பமான பிறகு தான் திருமணம் செய்து கொள்வார்களா என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
ஏனென்றால் பாலிவுட் நடிகை ஆலியா பட் திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமானார் அதேபோல் தற்பொழுது நடிகை இலியானா திருமணம் செய்து கொள்ளாமலேயே கர்ப்பமாக இருந்து வருகிறார். இதனை வைத்து தான் டாப்ஸியும் தனது கருத்தை கூறியுள்ளார் என நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகின்றனர்.